3 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா இடம்... திமுகவுடன் தேமுதிக பேரம் சுபம்

dmk-dmdk alliance talks on seat share successful

அதிமுக கூட்டணிக்கு செல்லும் யோசனையை புறந்தள்ளிவிட்டார் பிரேமலதா. கூட்டணி தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும், மைத்துனர் சுதீசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது.

"யாரிடமும் சீட் கேட்டு பிச்சை எடுக்க வேண்டாம். தனித்து போட்டியிடலாம். திமுக, அதிமுக கூட்டணி மீது மக்காளிடம் வெறுப்பு இருக்கிறது. அதனை ஓட்டாக மாற்றணும்னா தனித்து போட்டியிடுவது தான் சரி" என்று பிரேமலதாவிடம் வற்புறுத்துகிறார் மகன் விஜயபிரபாகரன்.

ஆனால், சுதீசோ, "தனித்து போட்டியிடுவது தற்கொலை முடிவு. அதிகார பலமும் பணபலமும்தான் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கிறது. இரண்டும் நம்மிடத்தில் இல்லை. பாஜக இருக்கும் அதிமுக கூட்டணியில் நாம் இருப்பதுதான் சரியாக இருக்கும். பாஜக தலைமை நமக்காக சீரியஷாக முயற்சித்துள்ளது என வலியுறுத்தி வருகிறார்.

இதனால் இருவரும் பிரேமலதாவிடம் பஞ்சாயத்து பேசி வருகிறார்கள். இதற்கிடையே, பிரேமலதாவிடம் திமுக தரப்பில் அழுத்தமான பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறார்கள்.

காங்கிரசிடமிருந்து 2 சீட்டுகளை திரும்பப்பெற்றும், திமுக தரப்பில் 2 சீட்டுகளை ஒதுக்கியும் 4 சீட் தர திமுக சம்மதித்துள்ளதாம். ஆனால், பிரேமலதா, 6 சீட்டுக்குப் போராடி வருகிறாராம்.

கடைசியாக 3 லோக்சபா, 1 ராஜ்யசபா தேமுதிக- திமுக பேரம் பேசி முடிக்கப்பட்டிருக்கிறதாம்.

எழில் பிரதீபன்

You'r reading 3 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா இடம்... திமுகவுடன் தேமுதிக பேரம் சுபம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்தனம் என நினைத்து சாக்கடையை பூசிக்கொள்வது தான் சாணக்கியத்தனமா?அன்புமணியை வெளுத்து வாங்கிய முரசொலி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்