பாகிஸ்தான் மீதான தாக்குதலால் பாஜகவுக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்குமாம் - எடியூரப்பா சொல்கிறார்!

India Pakistan war, Karnataka bjp leader Yeddyurappa says airstrike will help bjp

பாகிஸ்தான் மீதான இந்திய விமானப் படை தாக்குதலால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் வரும் தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அம் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் வாலாட்ட எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்தத் தாக்குதலால் நாளுக்கு நாள் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றுவது உறுதி என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளையும், செல்வாக்கு குறைந்துள்ளதையும் திசை திருப்பவே பிரதமர் மோடி போர் பதற்றத்தை உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் எடியூரப்பா கூறியுள்ள கருத்து அதை நிரூபிப்பது போல் உள்ளது.

You'r reading பாகிஸ்தான் மீதான தாக்குதலால் பாஜகவுக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்குமாம் - எடியூரப்பா சொல்கிறார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவுக்கென்று வருகிறது பிரத்யேக டொமைன் சர்வர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்