கேப்டனுக்குப் பழைய மவுசு இல்லை! திமுக முடிவால் ஆத்திரப்பட்ட பிரேமலதா!!

Premalatha upsets over DMK

திமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கத் தயாராகி வருகிறாராம் பிரேமலதா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் சுதீஷுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்தார் சபரீசன்.

இதற்காக தனியார் ஓட்டலில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தனர். நம்மோடு விஜயகாந்த் நிச்சயமாக கூட்டணி சேருவார் என கருணாநிதியிடம் உறுதியாகக் கூறிவந்தார் ஸ்டாலின். இந்த பேச்சுவார்த்தையிலும் பணம்தான் பிரதானமாகப் பேசப்பட்டது.

ஒருகட்டத்தில், அதற்கும் திமுக தலைமை இறங்கிவந்தது. இதனை அறிந்த ஜெயலலிதா, உளவுத்துறை மூலமாக சில வேலைகளைச் செய்தார். பிரேமலதா கேட்ட தொகையைவிட அதிகப்படியான தொகை பேசப்பட்டது.

இதற்குப் பக்கபலமாக வைகோ இருந்தார். மக்கள் நலக் கூட்டணி என்ற புது விஷயத்தை ஏற்றுக் கொண்டார் விஜயகாந்த். இதனை விரும்பாத சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட முக்கியமான தலைகள், தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு இடம் பெயர்ந்தன.

அந்தத் தேர்தலில் ஒரு சீட்டைக் கூட வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியது தேமுதிக. மக்கள் நலக் கூட்டணியால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.

இந்தமுறையும் திமுகவிடம் அதே டிமாண்டை முன்வைத்தார் சுதீஷ். கடந்தமுறை இருந்ததைப் போன்ற மவுசு இல்லாததால், பணம் கொடுக்கும் நிலையிலும் ஸ்டாலின் இல்லை.

இதனால் கோபப்பட்ட பிரேமலதா, அவர்கள் எத்தனை சொன்னாலும் கேட்கப் போவதில்லை. ஸ்டாலின் பிறந்த தினத்தில் அவருக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும்.

எடப்பாடி சாய்ஸ்தான் பெஸ்ட் எனக் கூறினாராம். இன்னும் 24 மணி நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியமான விஷயங்கள் நடக்கலாம் என்கிறார்கள் தேமுதிக தரப்பில்.

எழில் பிரதீபன்

You'r reading கேப்டனுக்குப் பழைய மவுசு இல்லை! திமுக முடிவால் ஆத்திரப்பட்ட பிரேமலதா!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விமானி அபிநந்தனை திருப்பி அனுப்ப தயார்; ஆனால்.... - இந்தியாவுக்கு பாகிஸ்தான் வைத்த டிமாண்ட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்