இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடி ராமச்சந்திர ராவ் மரணம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடி ராமச்சந்திர ராவ் மரணம்

ந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியாக திகழ்ந்தவரும் இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான உடுப்பி ராமச்சந்திர ராவ் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.

பெங்களுருவில் வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அதிகாலை 3 மணியளவில் மரணம் அடைந்தார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அடாமரு பகுதியில் பிறந்த இவர், இஸ்ரோவில் பல்வேறுத் திட்டங்களின் முன்னோடியாக திகழ்ந்தார். திருவனந்தபுரம் இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தின் வேந்தராக இருந்தார். 1984 முதல் 94ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக சிறப்பாக பணியாற்றினார்.

ஏ.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் இவரின் காலத்தில்தான் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டன. இதில், பி.எஸ்.எல்.வி 2 டன் எடை கொண்ட செயற்கை கோளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. கிரயோஜினிக் இன்ஜீன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்கவும் இவர்தான் வித்திட்டார்.

1976ம் ஆண்டு இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது.

 

You'r reading இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடி ராமச்சந்திர ராவ் மரணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பணியிடங்களில் பாலியல் தொல்லை ; ஆன்லைனில் பெண்கள் புகார் அளிக்கலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்