ஒரு செம்மறி ஆட்டின் விலை மூன்றரை கோடி

Worlds most expensive sheep sold in Scotland

ஸ்காட்லாந்து நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன் செம்மறி ஆடுகளுக்கான ஏலச்சந்தை நடந்தது. உயர் ரகத்தைச் சேர்ந்த 19 செம்மறி ஆடுகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டன. இந்த ஏலத்திற்கு 'டபுள் டைமண்ட்' என்ற ஒரு உயர் ரக செம்மறி ஆடும் கொண்டு வரப்பட்டது. பெயரைப் போலவே இந்த ஆட்டின் மதிப்பு மிக அதிகமாகும். முதலில் 10 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தொகை மெதுவாக உயர ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல இந்த ஆட்டின் விலை அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியில் சார்லி போடன் என்பவர் ₹3.59 கோடிக்கு டபுள் டைமண்டை ஏலத்தில் எடுத்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன செம்மறி ஆடு என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த சந்தையில் இரண்டே கால் லட்சத்திற்கு ஒரு ஆடு ஏலம் போனது. அது தான் இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை டபுள் டைமண்ட் முறியடித்து விட்டது. இந்த ஆட்டின் இறைச்சிக்கு டிமாண்ட் அதிகமாகும். இந்த ஆட்டுக்கு கிடைத்த விலை கூட அப்பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கிடையாது என்பது ஒரு வேடிக்கையான அம்சமாகும்.

You'r reading ஒரு செம்மறி ஆட்டின் விலை மூன்றரை கோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு - அரசாங்கம் தரும் மூன்று அசத்தல் கடன் திட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்