16000 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு - பிரதமரின் சம்பதா யோஜானா திட்டம்

Employment for 16000 farmers - Prime Ministers Sampatha Yojana Scheme

பிரதமரின் சம்பதா யோஜானாவின் ஒருங்கிணைந்த கசங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டுத் திட்டத்தின் கீழ் பதப்படுத்துதல் தொழிலை முன்னெடுத்துள்ளார் அமைச்சர் ஹர்சம்ரத் கவுல் பாதல். இதன் மூலம் 2,57,905 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையே 27 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . மேலும் இதன் மூலம் மறைமுகமாக 16000 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*ஆந்திரப் பிரதேசத்தில் 7 திட்டங்களுக்கும்,

*பீகாரில் ஒரு திட்டத்துக்கும்,

*குஜராத்தில் 2 திட்டங்களுக்கும்,

*ஹரியாணாவில் 4 திட்டங்களுக்கும்,

*கேரளாவில் ஒரு திட்டத்துக்கும்,

*மத்தியப் பிரதேசத்தில் ஒரு திட்டத்துக்கும்,

*பஞ்சாபில் ஒரு திட்டத்துக்கும்,

*ராஜஸ்தானில் 2 திட்டங்களுக்கும்,

*தமிழ்நாட்டில் 4 திட்டங்களுக்கும் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் 1 திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த 27 ஒருங்கிணைந்த சங்கிலி திட்டங்கள் ரூ 743 கோடி மொத்த முதலீட்டை ஈர்த்து, நவீன, புதுமையான உள்கட்டமைப்பை நாடு முழுவதும் உருவாக்கும். ரூ 208 கோடி நிதியுதவி பெறும் இந்தத் திட்டங்கள் இந்தியாவின் உணவு சங்கிலியின் திறனையும், உறுதியையும் அதிகரிக்க உதவும்.

அழுகக்கூடிய பொருள்களைப் பாதுகாக்க போதுமான கிடங்கு போன்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், பழங்கள் மற்றும் காய்கறித் துறையில் இந்தியாவைத் தற்சார்பாக்கவும் உதவும் என்று அமைச்சர் பேசினார்.

You'r reading 16000 விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு - பிரதமரின் சம்பதா யோஜானா திட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அன்று நான் என் அக்காவுக்கு செய்ததை நினைத்தால் இப்போது எனக்கு கலக்கமாக இருக்கிறது - நடிகை பூர்ணா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்