இனி எளிதாக மின் இணைப்பு பெறலாம் - விவசாயிகளுக்கான மின் இணைப்பு நெறிமுறைகள் வெளியீடு!

Farmer Can Get EB Connection Easily From Now - Guidelines Released

தமிழகத்தில் , விவசாய மின் இணைப்புப் பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன . அவற்றை கலையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

மின் இணைப்புக் கோரும் விவசாயின் கிணறு இருவருக்கு சொந்தமாக இருப்பின் ( கூட்டு பட்டா ) , மற்றொருவர் ஒப்புதல் தர மறுக்கும் பட்சத்தில் , ஒப்பந்த பத்திரத்தை ( இன்டிமேனிட்டி பாண்ட் ) மட்டும் இணைத்தால் போதும் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் மற்றும் கிணறு வைத்திருந்தால் அதற்கான உரிமை சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்று இணைத்தால் போதும்.

ஒரே சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு நம்பரில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருந்தால் ஒவ்வொரு கிணறுக்கும் தனித்தனி மின் இணைப்பு எண் தரப்படும். ஒருவருக்கு மட்டுமே சொந்தமான கிணற்றில் ஒரு மின் இணைப்பு இருந்தால் , அவர் மற்றொரு இணைப்பை விவசாய பணிக்காகவோ அல்லது மற்ற பணிக்கு தண்ணீர் இறைப்பதற்கு அதற்கேற்ற விலைப்பட்டியல் படி வழங்கப்படும்.

விவசாய மின் இணைப்பை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். விவசாய மின் இணைப்பில் சேஞ்ச்ஓவர் சுவிட்ச் அமைத்து , உபயோகத்துக்கு கொண்ட வருவதற்கு எந்தவித ஆவணமும் தேவையில்லை , மின்சார அலுவலரிடம் இருந்து அனுமதி பெற்றால் போதும். இந்த அறிவிப்புகளை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எம்.சந்திரசேகர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டனர்.

You'r reading இனி எளிதாக மின் இணைப்பு பெறலாம் - விவசாயிகளுக்கான மின் இணைப்பு நெறிமுறைகள் வெளியீடு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டை இடிக்கும் பாசிச ஆட்சி - கங்கனா மீண்டும் தாக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்