ஆய்வில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் புகைப்பிடிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 6 கோடியாம்

இந்தியாவில் புகைப்பிடிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 6.2 கோடி பேர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த புற்று நோய் கழகம் ஒன்று இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், 6.2 கோடி சிறுவர், சிறுமியர் புகைப்பிடிப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புகைப்பிடிப்பதற்காக மட்டும் இந்தியர்கள் சராசரியாக ரூ.2 கோடி செலவு செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. புகைப்பழக்கத்தால், வாரத்துக்கு 17 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, இந்தியாவில் 6.2 கோடி சிறுவர், சிறுமியர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், இதில், 4 லட்சத்து 29 ஆயிரத்து 500 பேர் சிறுவர்கள் என்றும் 1 லட்சத்து 95 ஆயிரத்து 500 பேர் சிறுமிகள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள், பெற்றோர்களுக்கு தெரியாமல் சிகரெட் புகைக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல், பெரியவர்களில் சுமார் 9 கோடியே 3 லட்சம் பேர் ஆண்களும், 1 கோடியே 34 லட்சம் பெண்களும் சிகரெட் பிடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஆய்வில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் புகைப்பிடிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 6 கோடியாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்: தேசிய கீதத்தில் திருத்தம் ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்