கொல்லிமலையின் இயற்கை அழகுரம்மியமான நீர் வீழ்ச்சி

the place of kollimalai nature beauty

நம் தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.பெரும்பாலும் அனைத்து சுற்றுலா தலங்களும் பச்சை பசெலென்றே காணப்படும்.இதற்க்கு கொல்லிமலை மட்டும் விதிவிளக்கல்ல இச்சுற்றுலா தலத்திர்க்கு மக்களின் வருகை சற்றுக் குறையாகவே இருப்பதால் இயற்க்கையின் அழகு மாசு படாமல் எப்பொழுதும் பசுமை பூத்து குலுங்குகின்றது.தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய மலையின் தொடர்ச்சி தான் கொல்லிமலை.

மலைகளை குடைந்து சாலை அமைக்கப்பட்டுள்ளதால் 70 வளைவுகளை கொண்ட பெரிய மலையாக விளங்குகிறது கொல்லிமலை.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மலைப்பகுதிய காட்டிலும் கொல்லிமலை அதிக வளைவுகளை கொண்டது.இதானால் ஆபத்தான பகுதியாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.எட்டுக்கை அம்மன் மற்றும் கொல்லிமலை என்ற இந்து பெண் கடவுள்களின் பெயர்களால் கொல்லிமலை என்று பெயர் பெற்றது.ஆனால் சிலர் இது முனிவர்கள் வாழும் இடமாகவும் கூறுகின்றனர்.கிட்ட தட்ட இம்மலை 280 கி.மி பரப்பளவை கொண்டது.ராசிபுரத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு இம்மலையில் இருந்து ரகசிய பாதை உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் இம்மலைக்கு யாத்திரை பாதை எனவும் பெயர் உண்டு.எந்த ஒரு புகைமண்டலத்தாலும் மாசுபடாமல் தன் இயற்க்கை அழகை நீங்காமல் நீடித்து கொண்டிருக்கின்றது கொல்லிமலை.

மாலையில் மற்றும் பகலில் இயற்க்கை எழிலோடு நம் மனதை பயணிக்கலம்.நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டு இயற்க்கையின் சாரலிலும் மற்றும் அதனின் அழகில் மதி மயங்கி அவ்விடத்தை விட்டு நீங்காது வண்ணம் மனதை ஆட்கொள்ளும்.
மன அமைதி பெற விரும்புபவர்கள் இம்மலையை நோக்கி பயணிக்கின்றனர்.குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் நீர்விழ்ச்சிகளும் உள்ளது.ஆகாயத்தை பெயர்கொண்டு ஆகாய அருவியாகவும் முதன்மை அருவியாகவும் விளங்குகிறது.நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து எந்த காலத்திலும் வற்றுவது இல்லை.இந்நீர் விழ்ச்சிகள் அதிக பாறைகளை கடந்து செல்ல நேரிடும்.இவ்வகை இயற்க்கையின் அழகை நோக்கும் போது தான் இறைவனின் படைப்பு அதிசியம் என்று புலப்படுகிறது.



இராவணன் திரைப்படத்திலும் உசுரே போகுதேஎன்ற பாடலை ஆகாய கங்கை நீர் விழுச்சியில் படம்பிடித்தனர்.பனிமூட்டம் சாரல் மழையும் இப்பாட்டிற்க்கு நயத்தை எடுத்து கூறுகிறது.ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி போல் மாசிலா நீர் வீழ்ச்சி மற்றும் நாம் நீர் வீழ்ச்சி என்று மூன்று நீர் விழ்ச்சிகள் முத்துக்கள் போல் கொல்லிமலையில் பதிக்கப்பட்டுள்ளது.வருடத்தில் இருக்கும் 12 மாதங்களும் கொல்லிமலைக்கு செல்ல உரிய காலமாகும்.மழைக்காலத்தில் பனி மூட்டமாகவும் கோடைகாலத்தில் வெப்பநிலை சமநிலையாகவும் நிலவுகிறது.கொல்லிமலைக்கு ரயில்களிலும் மற்றும் பேருந்துகளிலும் பயணம் செய்ய வசதி உண்டு.
“இயற்க்கைக்கு வயது வரம்பு கிடையாது தன் அழகை மேல் மேலும் ரசிகர்களின் இமைகலுக்கு ரம்மியமாக எடுத்து காட்டுகிறது"

You'r reading கொல்லிமலையின் இயற்கை அழகுரம்மியமான நீர் வீழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகை பலாத்கார வழக்கு 2 நட்சத்திரங்கள் திடீர் பல்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்