மாநகராட்சியின் தூய்மை பணியாளர் அறிவிப்பு !

Corporation Cleaning Staff Announcement!

கோவை மாநகராட்சி நிர்வாகம், காலியாக உள்ள, மேலும், 530 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க, வரும் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாநகராட்சியில், 6,000 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், 549 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு, டிச., மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.அனைத்து ஜாதியினரும் பங்கேற்கலாம் எனக் கூறியதால், துப்புரவுத் தொழிலாளர் பணி என்ற போதிலும், பி.காம்., - பி.எஸ்.சி., - பி.இ., - எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட, 7,300 பேர் விண்ணப்பித்தனர்; நேர்காணலில், 5,200 பேர் பங்கேற்றனர்.அதில், இட ஒதுக்கீடு அடிப்படையில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல்கட்டமாக, 326 பேருக்கு, கடந்த மார்ச் மாதம், வேலை வழங்கப்பட்டது; மீதமுள்ள, 223 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

அப்பணியிடங்களை, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில், தினக்கூலியாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களில், 10 ஆண்டுகள் சீனியாரிட்டியில் இருப்போரை நிரப்ப வேண்டுமென, தொழிலாளர் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர். போராட்டமும் நடத்தினர். மக்களின் நலன் கருதி, போராட்டத்தைக் கைவிட்டு, வேலைக்குத் திரும்பினர்.இச்சூழலில், தூய்மை பணியாளர் பணிக்கு, மேலும், 530 காலியிடங்களுக்கு, வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள, ஒப்பந்த பணியாளர்கள், சீனியாரிட்டி அடிப்படையில், தங்களை முதலில் நிரந்தரம் செய்ய வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ் தெரிந்தால் போதும்துாய்மை பணியாளர் பணிக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதும். சம்பளம் - ரூ.15,700-50,000.

கோவை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டு நகல், இருப்பிட சான்று நகல், ஆதார் அட்டை நகல் அவசியம் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்ப வேண்டும். 1.08.2020ல், 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் வயது குறித்து, மருத்துவ அலுவலரின் சான்று, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை இருந்தால் இணைக்கலாம். அரசிதழில் பதிவு பெற்ற அலுவலரிடம் நன்னடத்தை சான்று பெற்று இணைக்க வேண்டும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

You'r reading மாநகராட்சியின் தூய்மை பணியாளர் அறிவிப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி நடிகை மீது போதை பொருள் புகாரால் ரசிகர்கள், குடும்பத்தினர் அதிர்ச்சி.. கன்னித்தீவு போல் தொடரும் நடிகர் தற்கொலை விவகாரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்