கல்யாண பெண் இல்லாமல் புதிய முறையில் கல்யாணம்!!மகனின் கனவை நிறைவேற்றிய தந்தை

Marriage in a new way without a bride

சபர்க்கந்த மாநிலத்தை சார்ந்தவர் விஷ்ணு பரோட் அவரின் அன்பு மகன் அஜய் பரோட் என்பவர், சற்று மனநிலை பாதித்தவர் மற்றும் கற்றல் தன்மை இல்லாதவர். அஜய் என்பவர் இசையில் மிகவும் நாட்டம்கொண்டவர் என்பதால் தெருவில் எங்கு பாட்டு சத்தம் கேட்டால் போதும் விதியில் இறங்கி குத்தாட்டம் போடுவார். தந்தை விஷ்ணு தன் மகனை உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு நடந்த சடங்குகள் அனைத்தையும் கண்ட அஜய்யின் மனதில் தீராத ஏக்கம் பிறந்துவிட்டது.

அஜய் தன் தந்தையிடம் இங்கு நிகழும் சடங்குகள் எனக்கு எப்பொழுது நடக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் தன் தந்தையிடம் கேட்டார்.விஷ்ணு பரோட் தன் மகனின் சொற்களால் மனதளவில் மிகவும் பாதித்தார். தன் உறவினர்களிடம் கூறி ஆலோசனை பெற்று அஜய்க்கு திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார் விஷ்ணு.பத்திரிக்கை அடித்து உறவினர் அனைவருக்கும் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்கள். அஜயின் திருமணம் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது வெடிகள் வெடித்து மேளதாளம் முழங்க குதிரையின் மேல் ஏற்றி புதிய பட்டாடை அணிவித்து கோலாகலமாக மாப்பிள்ளையான அஜய்யை வரவேற்றனர்.

தன் மகனின் கனவை நிறைவேற்றிய தந்தை தன் வீட்டின் பக்கத்தில் இருக்கும் சமுதாய கூடாரத்தில் சுமார் 300 பேருக்கு அறுசுவை விருந்து அளித்தார். மகனின் கடமையை நிறைவேற்றிய சந்தோஷத்தில் இருக்கும் விஜய் பரோட் மற்றோரு பக்கம் தன் நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கும் அஜய் பரோட்.

You'r reading கல்யாண பெண் இல்லாமல் புதிய முறையில் கல்யாணம்!!மகனின் கனவை நிறைவேற்றிய தந்தை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காந்தி ஜெயந்தியன்று பஞ்சாபில் விவசாயிகள் பேரணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்