புதிய தொழில்முனைவோர்களை இணைக்கும் அரசின் மின் சந்தை தளம் !

Government e-marketplace platform that connects new entrepreneurs!

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்கள் புதிய தொழில்முனைவோர் களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களின் வணிகத்தை (GeM- Government e-Marketplace ) எனும் தளத்தில் பதிய அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் அவர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை அரசு மற்றும் அரசு சார்ந்த, பொதுப்பணித்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம்.

மேலும் அவர் கூறியது இதுவரை இந்த GeM தளத்தில் 4000 தொழில்முனைவோர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த GeM தளமானது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் ஆகஸ்டு 2016 ல் தொடங்கப்பட்டது.இந்த தளத்தின் மூலம் நேரடியான மற்றும் வெளிப்படையான கொள்முதலை, தொழில்முனைவோர்கள் இடமிருந்து அரசு நிர்வகிக்கும் பல இலட்சம் கோடி முதலீடுகளுக்குத் தேவையானவற்றைக் கொள்முதல் செய்து கொள்ளும்.

மேலும் அனைத்து தொழில்முனைவோர்களும் உற்பத்தி செய்யும் பொருட்களை அல்லது அளிக்கும் சேவையைத் தளத்தில் பதிய வேண்டும். அதனை அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள் போன்ற அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பியூஷ் கோயல் , தேசிய தொழில்முனைவோர் விருது 2020 நிகழ்ச்சியில் கூறினார்.

இதுவரை உணவு தயார்ப் படுத்துதல் துறை , இரயில்வே , விமான துறை, கல்வி நிலையங்கள், விவசாயம், மின்சாதன பொருட்கள், பாதுகாப்புத் துறை என அனைத்திலும் 361 தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சுமார் 4000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

You'r reading புதிய தொழில்முனைவோர்களை இணைக்கும் அரசின் மின் சந்தை தளம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் படத்தையோ பேச்சையோ.. பயன்படுத்தக்கூடாது.. பீகார் பா.ஜ.க. எச்சரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்