ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்!

Central government cannot provide 50 per cent reservation for OBC students!

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர்ந்து இருந்தன‌.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளிவரும் நிலையில், இட ஒதுக்கீடு வழங்கினால் அது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மனுதாரர்கள் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசு சட்டம் இயற்றிக் கொள்ளலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாமகவின் நிறுவனர் மரு.இராம தாசு அவர்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தர மறுக்கும் என ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகைக்கு சீக்கிரமே டும் டும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்