வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்...!

Special camp to add name to voter list:

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களைச் சேர்க்கத் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி விபரம் :

நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020 மற்றும் டிசம்பர் மாதம்
5.12.2020 ,6.12.2020 ,12.12.2020 ,13.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விவரங்களுடன் இந்த முகாமில் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்துக் கொள்ளலாம்.

You'r reading வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆதார் அட்டையில் மாறுதல்கள் செய்ய ஆன்லைனில் முன் பதிவு வசதி அறிமுகம்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்