இந்தியாவின் அடுத்த அதிரடி! வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நாக் ஏவுகணை!

Indias next action! Successfully tested NAG missile!

பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதிகட்ட சோதனை பொக்ரானில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி உள்ளது. இதில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நாக் ஏவுகணையும் ஒன்று, எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று இறுதிகட்ட சோதனை நடைபெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான பொக்ரானில் "நாக்" ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஏவுகணை விரைவில் இந்திய இராணுவத்தில் இணைக்கப்படும். இந்த ஏவுகணை நவீன ரக வலுவான பீரங்கிகளையும் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.

You'r reading இந்தியாவின் அடுத்த அதிரடி! வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நாக் ஏவுகணை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `டார்கெட் ராஜஸ்தான்.. ஐஎஸ்ஐ பயிற்சி.. பாலக்கோட்டில் செயல்பட துவங்கிய தீவிரவாத குழுக்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்