ஐடிபிஐ ன் வருமான திட்டம்!

இந்தியாவின் தனியார் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஐ.டி.பி.ஐ ஒன்றாகும். இந்நிறுவனம் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ், தன் உத்திரவாதத்துடன் கூடிய இணைக்கபடாத, பங்குபெறாத ஆயுள் காப்பீட்டு திட்டமான ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டத்தை உத்திரவாதத்துடன் கூடிய வருமான திட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் திரும்ப பெறும் உத்திரவாத தொகை ஆகிய இரண்டு பயன்களும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரின் நிதி தேவைகள் மற்றும் எதிர்கால இலக்குகளின் அடிப்படையில் வருமானம் மற்றும் காலவரை ஈட்டுறுதி தொகைக்கான விருப்பத்தேர்வுகளை அளிக்கிறது.

தற்போது நிலவிவரும் பெருந்தொற்று, நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் சந்தையின் நிலையில்லாத் தன்மையின் போக்கு போன்ற நிர்ணயிக்கபடாத புறகாரணிகளால், ஒருவர் தனது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய வருமானத்தை ஒரு தீர்வின் மூலமாக பாதுகாப்பாக பிணைத்து உத்திரவாதத்துடன் திரும்ப பெறுவதற்கு காப்புறுதி செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஐடிபிஐ இந்த திட்டத்தை மெருகேற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading ஐடிபிஐ ன் வருமான திட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரட்டல், உருட்டல் செய்யும் அமைச்சர்... ராஜேந்திர பாலாஜியை வறுத்தெடுத்த ஸ்டாலின்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்