விண்வெளிக்கு முதல் தனியார் சர்வீஸ் : ஆட்களை அனுப்பியது அமெரிக்க நிறுவனம்

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் ராக்கெட் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி பயணத்தை துவக்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் ராக்கெட் நிறுவனம் அமரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப் கனராவெல் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தனது முதல் விண்வெளி டிரிப்பை துவக்கியது. டிராகன் கேப்ஸ்யூல் எனப்படும் ராக்கெட்டில் மூன்று அமெரிக்க வீரர்களும் ஒரு ஜப்பானிய வீரருமாக நால்வர் கடந்த நேற்று இரவு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். விண்வெளியில் சுற்றுப்பாதையை சென்று அடைந்ததும் அவர்கள் ஒரே வீச்சில் நாங்கள் சுற்றுப்பாதையை அடைந்து விட்டோம் என்று அவர்கள் வானொலிச் செய்தி அனுப்பி இருந்தனர்.

ஸ்பேஸ் எக்ஸ் கம்பெனியின் நிறுவனர் எலோன் மஸ்க் கொரோனா தொற்று காரணமாக புறப்படும் இடத்திற்கு வரவில்லை. விண்வெளி வீரர்கள் ஃபால்கன் ராக்கெட்டில் புறப்பட்டதை தொலைதூரத்திலிருந்து பார்த்தார். விண்வெளியில் பயணம் மேற்கொண்ட நான்கு வீரர்களில் ஒருவர் பெண். இந்த நால்வர் குழுவின் தலைவர் ஹாப்கின்ஸ். இதில் இடம் பெற்ற ஜப்பானிய வீர் சோய்சி நோகுசி . கடந்த 40 ஆண்டுகளில் மூன்று வகை விண்கலங்களில் பயணம் செய்தவர். இந்த 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். அங்கு ஏற்கனவே ஒரு அமெரிக்க விண்வெளி வீரரும் 2 ரஷ்ய விண்வெளி வீரர்களும் தானிக்கியுள்ளனர். அவர்களுடன் இந்த நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில நாட்கள் தங்கியிருப்பார்கள்.

You'r reading விண்வெளிக்கு முதல் தனியார் சர்வீஸ் : ஆட்களை அனுப்பியது அமெரிக்க நிறுவனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடிலெய்டில் கொரோனா பரவல் ஆஸ்திரேலிய வீரர்கள் தனிமையில் சென்றனர் முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்