குவாட் காமிரா, ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்: டிசம்பர் 22 முதல் விற்பனை

சாம்சங் கேலக்ஸி எம்11, விவோ ஒய்20 மற்றும் ஆப்போ ஏ53 இவற்றுக்குப் போட்டியாக ஸோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. வாட்டர்டிராப்-ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச் மற்றும் பின்புறம் நான்கு காமிராக்களுடன் இது வெளிவந்துள்ளது.

ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை சிம் (நானோ)
தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்எச்டி+; 1080X2340 பிக்ஸல் தரம்; டாட் டிராப்
முன்பக்க காமிரா: 8 எம்பி ஆற்றல் (செயற்கை நுண்ணறிவு - ஏஐ பயன்பாடு)
பின்பக்க காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)
இயக்கவேகம் : 4 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (512 ஜிபி வரை கூட்டலாம்)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; MIUI 12

4ஜி VoLTE, டூயல்பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி, ஹைரெஸ் சான்றிதழுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன், பிளேசிங் புளூ, எலெக்ட்ரிக் கிரீன், ஃபியரி ரெட் மற்றும் மைட்டி பிளாக் வண்ணங்களில் கிடைக்கும்.

4 ஜிபி + 64 ஜிபி கொண்ட போன் ரூ.10,999/- விலையிலும், 4 ஜிபி + 128 ஜிபி கொண்டது ரூ. 11,999/- விலையிலும் டிசம்பர் 22ம் தேதி பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் மி இணையதளங்களில் விற்பனையாகும். மி நேரடி அங்காடிகளிலும் வாங்கலாம்.

You'r reading குவாட் காமிரா, ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்: டிசம்பர் 22 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கலக்கலான தக்காளி தொக்கு செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்