மல்லிகை மலரின் விலை 3000 ரூபாய்

பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததால் தமிழகத்தின் முக்கிய பூக்கள் மலர் சந்தை களான சத்தியமங்கலம் மற்றும் தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தற்போது மார்கழி மாத பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது. இதன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதாலும் பூக்களின் விலை அதிகரித்து இன்று மல்லிகைப்பூ கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரம் முன்பு வரை 875 ரூபாய் முதல் 1505 வரை மல்லிகை , இன்று அதிரடியாக 3 ஆயிரம் ரூபாயை தாண்டியதால் மலர் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் தன் மாவட்டத்தில் மலர் சந்தைக்கு பிரசித்தி பெற்ற குமரி மாவட்டம் தோவாளையில் மல்லிகை பூவின் விலை 3 ஆயிரத்தைத் தாண்டியது இன்று காலை மார்க்கெட் துவங்கியதும் 2,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரு சில நிமிடங்களிலேயே 3,000 ரூபாய் என உயர்ந்ததால் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்

You'r reading மல்லிகை மலரின் விலை 3000 ரூபாய் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு.. தண்டனை விவரம் நாளை தெரியும்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்