2020 Rewind, அசத்தும் கூகுள் பே செயலி!

2020 ம் ஆண்டை உலக மக்களால் மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய கொரோனாவால் மக்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் வெகுஜன மக்கள் உட்பட இராஜ வாழ்க்கை வாழ்ந்த பெரும் செல்வந்தர்களும் நடைமுறை வாழ்க்கையை வாழ முடியாமல் பரிதவித்தனர்.அன்றாட வாழ்க்கையின் இயல்பு நடவடிக்கைகளைக் கூட மக்களால் சரிவர வாழமுடியவில்லை. தினக்கூலிகளின் தினசரி வருமானம் முதல் அன்றாட பிரஜைகளின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்த பெருந்தொற்றால் தனிமனித உறவுமுறைகளுக்கு இடையில் உள்ள நெருக்கங்களும் மிகவும் பாதிப்புக்குள்ளானது. சமூக இடைவெளி, கை குலுக்கல் இல்லாமல் போன்ற நெருடல்களுக்கு உள்ளாக வேண்டி இருந்தது.

இதனால் வெகுஜன மக்கள் உட்படக் குழந்தைகள் வரை அனைவரும் இணையக் கல்வி முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டனர். எனினும் மக்கள் இந்த நடைமுறைக்குப் பழகிவிட்டனர். இதனால் மக்கள் பணப் பரிவர்த்தனையைக் கூகுள் பே மற்றும் போன்பே போன்ற செயலிகள் மூலம் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெருந்தொற்றில் மட்டும் இந்த செயலிகளின் மூலம் மட்டுமே ரூ. 3 இலட்சம் கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூகுள் பே செயலி தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு கடந்த ஆண்டில் செலவு செய்த பணம் எவ்வளவு, எந்தெந்த மாதங்களில் செலவு செய்யப்பட்டது. போன்ற விவரங்களை அறிந்து கொள்ள ரீவைண்டு எனும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.கூகுள் பே செயலியைத் திறந்தவுடன் திரையில் தோன்றும் ரீவைண்டு பொத்தானை கிளிக் செய்து இந்த தகவல்களைப் பெறலாம்.

You'r reading 2020 Rewind, அசத்தும் கூகுள் பே செயலி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முறைகேடாக பங்கு விற்பனை : முகேஷ் அம்பானிக்கு 40 கோடி அபராதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்