2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை!

இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Metrological Department) 2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. IMD ஆனது முக்கியமாக வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளை வழங்குதல் மற்றும் புயல்களின் உருவாக்கம் குறித்தத் தகவல்களை அளிக்கின்றது. வட இந்தியப் பெருங்கடல் பகுதியானது மலாக்கா நீர்ச்சந்தி, அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், IMD ன் தகவல் படி 2020ம் ஆண்டின் படி 1901 ஆம் ஆண்டில் இருந்து மிகவும் வெப்பமான 8 வது ஆண்டாகும்‌.

கடந்த பத்து ஆண்டு காலத்தில், 2019-2020 ம் ஆண்டானது மிகுந்த வெப்பமான ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் ஆனது கடுமையாக வானிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இடி மற்றும் மின்னல் காரணமாக 215 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இந்தியாவின் வருடாந்திர சராசரி புவிமேற்பரப்பு வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி உள்ளதாக IMD அறிவித்துள்ளது. மேலும் 2020 ம் ஆண்டில் வட இந்தியப் பெருங்கடலில் 5 பெரிய புயல்கள் உருவாகியுள்ளன. அவையாவன ஆம்பென், புரெவி, நிசர்கா, நிகர் மற்றும் கதி புயலாகும்.

You'r reading 2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய பிரதேச மாநிலத்தின் Launch pad திட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்