ரயில் டிக்கெட் இணையதளத்தில் இனி பஸ் டிக்கெட்..

ரயில் டிக்கெட்டுகளை விற்கும் ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் இனி பஸ் டிக்கெட்டுகளையும் புக் செய்யலாம். ஐஆர்சிடிசி என்ற அமைப்பு ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்வதற்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையதளம் ஆகும் இந்த இணையதளத்தில் கூடுதல் சேவைகள் ஆக ஏற்கனவே விமான டிக்கெட்டுகளை புக் செய்யும் வசதி உள்ளது தற்போது இந்த சேவையை விரிவு படுத்தப்பட்டு பெருநகரங்களில் பஸ் டிக்கெட்டுகளையும் புக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஆர்சிடிசி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பஸ் புக்கிங் சேவைக்காக அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களையும் தனது தளத்தில் இணைத்துள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் பேருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களை இணைக்கும் பேருந்து சேவைகளை ஐஆர்சிடிசி தனது தளத்தில் அளிக்க உள்ளது. இத்தளத்தில் அதிகப்படியாக 6 பேருக்கு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். டிக்கெட் புக் செய்யும் முன் பஸ்-ன் புகைப்படத்தை வாடிக்கையாளர்கள் பார்த்து டிக்கெட் புக் செய்யும் வசதி இதில் உண்டு.

மேலும் இத்தளத்தில் ஊட்டி ஆந்திரா கோவா கேரளா என பல்வேறு மாநிலங்களின் அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளும் இடம்பெற்றிருக்கும் . இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பஸ்களைப் புக் செய்ய முடியும். ஆன்லைன் பஸ் புக்கிங் சேவையை ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் வரும் மார்ச் மாத்திற்குள் இணைக்கப்பட உள்ளதாகவும், பிற முன்னணி ஆன்லைன் பஸ் புக்கிங் தளத்தில் இருக்கும் அனைத்து சேவைகளும் இந்தச் செயலியில் இடம்பெறும் எனவும் எனும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

You'r reading ரயில் டிக்கெட் இணையதளத்தில் இனி பஸ் டிக்கெட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கனிமொழி வேல் வாங்க மறுத்தது ஏன்? ஹெச்.ராஜா வெளியிட்ட ரகசியம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்