காரடையான் நோன்பு என்றால் என்ன?? அதனின் பயன் யாது?

கணவருக்கு எந்த வித ஆபத்து வரமால் இருக்கவும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் இறைவனுக்கு பல பூஜைகள் செய்து பெண்கள் வணங்குவார்கள். இதனை தான் காரடையான் நோன்பு என்று அழைக்கிறோம். இந்த விரதம் மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் பொழுது கடைபிடிக்கப்படுகிறது.

பெரும்பாலும் தமிழ்நாடு பெண்கள் இந்த நாளை விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். மாசி கடைசி நாள் இரவு முதல் அடுத்த நாள் காலை வரையில் இந்த நோன்பு நடைபெரும்.இதற்கு காமாட்சி நோன்பு, கேதார கவுரி விரதம், சாவித்திரி விரதம் என்று மூன்று முக்கியமான பெயர்களும் உண்டு. இந்த நோன்பில் இறந்த கணவனை மீண்டும் உயிரோடு எழ வைத்த சாவித்திரியை போற்றியும் தங்களது கணவர்கள் சத்தியவான் போல் நீண்ட நாள் வாழவும் பெண்கள் இறைவனிடம் கோரிக்கை வைப்பார்கள்.

You'r reading காரடையான் நோன்பு என்றால் என்ன?? அதனின் பயன் யாது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா? குழம்பும் அதிகாரிகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்