குறிப்பிட்ட வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் ப்ளேட்!

இந்தியாவில் இனி ‘குறிப்பிட்ட’ சில வாகனங்களுக்கு பச்ச நிற நம்பர் ப்ளேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனியார் வண்டிகளுக்கு வெள்ளை நிற நம்பர் ப்ளேட்டும் வணிக நோக்கோடு ஓடும் வண்டிகளுக்கு மஞ்சள் நிற நம்பர் ப்ளேட்டும் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்கள் ஆகியவை மட்டுமே இந்தியாவில் வாகன நம்பர் ப்ளேட்டில் உள்ள அதிகாரப்பூர்வ நிறங்கள்.

ஆனால், விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிர நம்பர் ப்ளேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனமோ, வணிக ரீதியிலான வாகனமோ, சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத வாகனங்களுக்கு இனிமேல் பச்சை நிற நம்பர் ப்ளேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான அரசாணையும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தற்சமயம் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. 

குறிப்பாக, பச்சை நிற நம்பர் பளேட் உள்ள வாகனங்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டோல் கேட் கட்டணம், நாடு முழுவதும் உள்ள பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றிலிருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குறிப்பிட்ட வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் ப்ளேட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'தப்பியோடிய மல்லையா என்றே அழைப்போமா?’- சாடிய லண்டன் நீதிமன்றம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்