தந்தைக்கான சவப்பெட்டியின் விலை 60 லட்சம்..!

நைஜீரியாவில் இறந்த தன் தந்தையின் உடலை புத்தம்புது பிஎன்டபிள்யூ காரில் வைத்து ஒருவர் அடக்கம் செய்துள்ளார்.
நைஜீரியாவில் உள்ள தொலைதூர கிராமம் இஹியாலா. அங்குள்ள அஸூபுய்க் என்பவரின் தந்தை முதுமையால் இறந்துபோனார். தன் தந்தையை அடக்கம் செய்வதற்கு அஸூபுய்க் தேர்ந்தெடுத்த சவப்பெட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம், புதிதாக வாங்கிய 66,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 60 லட்சம்) விலையுள்ள பிஎம்டபிள்யூ காரில் தந்தையின் உடலை வைத்துப் புதைக்க அஸூபுய்க் முடிவு செய்தார்.
தந்தை உயிரோடு இருக்கும்போது, ஒரு நல்ல காரை வாங்கிக் காட்டுவதாக தாம் கூறியதாகவும், அப்போது கார் வாங்குமளவுக்கு பணம் இல்லையென்பதால், இறந்த பிறகாவது அவரது உடல் சொகுசு காரில் இருக்கட்டும் என்பதற்காக இதை செய்ததாகவும் அஸூபுய்க் கூறியுள்ளார். புத்தம்புது சொகுசு கார், சடலத்துடன் குழிக்குள் இறக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அஸூபுய்க்கின் முடிவினை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

You'r reading தந்தைக்கான சவப்பெட்டியின் விலை 60 லட்சம்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட் கவுன்சிலிங்: தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்