ஒரே ஆண்டில் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்: இது இந்தியாவின் அவல நிலை

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் சிலர் மட்டுமே புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி, 40.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 22.7 சதவீதம் பேருக்கு மட்டுமே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், 2016ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமான குற்றங்கள், குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவி மக்களை கொன்றுவரும் நிலையில், இந்த புள்ளி விவரம் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

You'r reading ஒரே ஆண்டில் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்: இது இந்தியாவின் அவல நிலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூகுள் நிறுவனத்தில் இந்திய மாணவருக்கு பணி: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்