அருவியும் மேல் நோக்கி பாயும்.. காற்று ஓங்கி அடித்தால் ! (வீடியோ)

புவியீர்ப்பு விசையின் காரணமாக அருவிகள், மலைகளின் மேலிருந்து கீழ் நோக்கி பாய்வது தான் வழக்கம். ஆனால், இங்கிலாந்தில், கம்ரியா எனும் அருவி அந்நாட்டில் இரு தினங்களுக்கு முன் வீசிய புயலின் காரணமாக மேல் நோக்கி பாய்ந்துள்ளது. அதன் விடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தை தாக்கிய ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியது.

வட இங்கிலாந்து பகுதிகளை ஹெலன் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. யார்க்சையர் பகுதியில் உள்ள மாலர்ஸ்டேங் முனையில் கம்ரியா என்ற அருவி பாய்ந்தோடுகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் வேகத்திற்கு அருவியால் ஈடுகொடுக்க முடியவில்லை. புயல் காரணமாக புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி அருவி சீறிப் பாய்ந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

You'r reading அருவியும் மேல் நோக்கி பாயும்.. காற்று ஓங்கி அடித்தால் ! (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியன் வங்கி உள்பட பத்து வங்கிகளுக்கு தலைமை செயல் அதிகாரிகள் நியமனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்