இன்றைய (13.10.2018) ராசிபலன்கள்

Today (13.10.2018) Horoscope

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, முக்கிய வேலைககள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வர். மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்யவும். உத்யோகத்தில் வந்த எதிர்ப்புகள் அடங்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, முக்கிய காரியங்கள் விரைவில் கைக்கூடும். குடும்ப பெருமை உயரும். பண சேமிம்பில் கவனம் செல்லும். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் கூடும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும். உடன்பிறந்தவர்கள் ஆலோசனை வழங்குவர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பண வரவுக்கு நிறைய வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டி வரும். யாரிடத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போகவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பாதி அடைப்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, கௌரவும் உயரும். சிறிய முதலீட்டில் புதுத் தொழில் ஒன்றை தொடங்க முடியும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, தெய்வ பிராத்தனையை நிறைவேற்ற முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.

மகரம்:
மகர ராசி நேயர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, ஆன்மிக எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். நண்பர்களுடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாகும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

You'r reading இன்றைய (13.10.2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யோகாசனங்கள்: ஆஸ்துமாவை குணமாக்க தாளாசனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்