இன்றைய (15.10.2018) ராசிபலன்கள்

Today (15.10.2018) Horoscope

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் விருத்தியாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசி அன்பர்களே, யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை வளரும். உத்யோகத்தில் மறைமுகப் எதிர்ப்புகள் நீங்கும்.

மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே, நல்ல காரியங்களை தாமதிக்காமல் செய்ய நினைப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. பண புழக்கம் கணிசமாக உயர தொடங்கும். தொழில், வியாபாரம் பெரியளவில் வளர்ச்சியடையும்.

கடகம்:
கடக ராசி அன்பர்களே, குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். நண்பர்கள் வகையில் நல்ல செய்தி வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும்.

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே, உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி உறவு, அன்பும் அரவணைப்பும் கலந்து காணப்படும். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, குடும்ப பொருளாதாரம் உயரும். கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். புது பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்து வகையில் பணம் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை அதிகம் கவனிக்க வேண்டி வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும். புதிய தொழில், வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே, பயணங்களால் ஆதாயம் உண்டு. தெய்வ அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே, அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும்.

மீனம்:
மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்பு வகையில் எதிர்பாரா செலவுகள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

You'r reading இன்றைய (15.10.2018) ராசிபலன்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் இதுதான்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்