நியூசிலாந்துடன் இன்று டி-20 பைனல் - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

India plays Final t20 against NZ today

நியூசிலாந்துடனான கடைசி டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.

3 போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டி பைனல் போல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இன்று ஹாமில்டனில் நடைபெறும் கடைசி டி-20 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் நியூசிலாந்து மண்ணில் டி-20 தொடரை முதன் முறையாக கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்கும்.

நியூசிலாந்து அணியும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading நியூசிலாந்துடன் இன்று டி-20 பைனல் - தொடரை கைப்பற்றுமா இந்தியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - "தமிழகம் செய்ய முடியாததை செய்த அசாம்" - மோடிக்கு எதிராக நடந்த சிறப்பான, தரமான சம்பவம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்