ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி - வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

India plays1st t20 match against Australia today

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்தது போல் சொந்த மண்ணிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரு டி20 போட்டி, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னர் இந்தியா பங்கேற்கும் கடைசித் தொடர் என்பதால் ஆஸ்திரேலியாவுடனான இந்தத்தொடரில் திறமையை வெளிப்படுத்த இந்திய வீரர்கள் உற்சாகமாக களம் காண்கின்றனர்.

ஏற்கனவே கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக வென்று சாதனை படைத்த உற்சாகத்தில் உள்ள இந்திய அணி தற்போதும் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

You'r reading ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி - வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா - அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்