`நாங்கள் வெளியேற்றினோமா கிடையவே கிடையாது - அஷ்வின், ஜடேஜா குறித்து நெகிழும் குல்தீப் யாதவ்

We havent ousted Ashwin and Jadeja says Kuldeep

தமிழக வீரர் அஷ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் ஒருநாள் போட்டிகளில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் வருகைக்குப் பின்னால் அஷ்வினால் அணியில் இடம்பெற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா ஒருநாள் அணிக்குத் திரும்பினாலும் அஷ்வினால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்குத் திரும்ப முடியவில்லை. முன்னதாக இதுதொடர்பாக பேசிய அஷ்வின் தான் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பேன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு இது தொடர்பாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``நாங்கள் யாரையும் அணியில் இருந்து வெளியே அனுப்பவில்லை. அப்படி அனுப்படுவதற்கான வாய்ப்பும் கிடையாது. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டோம் அவ்வளவுதான். கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடி வருகிறோம். அஷ்வினும், ஜடேஜாவும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இப்போதும் டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் அவர்களுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களிடம் இருந்து நானும், சஹாலும் நிறைய கற்றுக்கொள்கிறோம். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது சிறப்பானா பங்களிப்பை அளிக்கிறோம். அந்த ஆட்டங்களில் அணி வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இதனால் எதை பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்த ஆட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.

You'r reading `நாங்கள் வெளியேற்றினோமா கிடையவே கிடையாது - அஷ்வின், ஜடேஜா குறித்து நெகிழும் குல்தீப் யாதவ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'சூர்யா 38’ படத்தைத் தயாரிக்கும் 'ஆஸ்கர்’ தயாரிப்பாளர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்