மூன்று ஃபாரீன் பிளேயர்ஸ்.... - முதல் போட்டியிலேயே சேசிங்கை தேர்வு செய்த தோனி

MS Dhoni wins the toss and elects to bowl first

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதில் சென்னை அணி முதலில் பௌலிங் செய்யவுள்ளது.

12-வது ஐபிஎல் சீசன் தொடக்கம், டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னை அணி ட்ரெண்ட் ஆகி வந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பௌலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடங்கவுள்ளது. இரு அணி வீரர்கள் விவரம் பின் வருமாறு....

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பார்த்தீவ் படேல், விராட் கோஹ்லி, மொயீன் அலி, ஏபி டி-வில்லியர்ஸ், ஹெடமையர், ஷிம்ம் டூப், கொலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், சஹால், முகமது சிராஜ், நவதீப் சைனி

சென்னை சூப்பர் கிங்ஸ்: அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹார், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

You'r reading மூன்று ஃபாரீன் பிளேயர்ஸ்.... - முதல் போட்டியிலேயே சேசிங்கை தேர்வு செய்த தோனி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'ஒரே ஒரு குருக்கள் வறார் வழி விடுங்கோ'... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வச்சு வச்சு செய்யும் நெட்டிசன்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்