ராயுடு மாஸ் ரெய்னா க்ளாஸ் - சீசனை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி!

csk won against rcb by 7 wickets

ஐபிஎல் 2019 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது.

12-வது ஐபிஎல் சீசன் தொடக்கம், டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகியுள்ளன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பௌலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடங்கியது. அதன்படி, ஆர்சிபிக்கு கோலியும், பர்திவ் படேலும் துவக்கம் கொடுத்தனர்.

ஆரம்பம் முதலே ஆர்.சி.பி. வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஹர்பஜன் சிங். கோலி, டிவில்லியர்ஸ் முக்கிய தலைகள் 3 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்த, அந்த அணி தடுமாறியது. அடுத்தடுத்து பௌலிங் போட்ட இம்ரான் தாஹீர், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் ஆர்சிபி வீரர்களை வெளியேற்றினர். இறுதியில் 17.1 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். ஆர்சிபியை பொறுத்தவரை ஓப்பனிங் கொடுத்த பார்த்தீவ் படேல் கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். அவர் தான் அந்த அணியில் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.

இதன்பின் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கேவுக்கு ராயுடு, வாட்சன் துவக்கம் கொடுத்தனர். இதில் வாட்சன் விரைவில் அவுட் ஆனாலும், ரெய்னா, ராயுடு சிறப்பாக ஆடினர். ரெய்னா 19 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆனார். இருப்பினும் இன்றைய போட்டியின் போது 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ரெய்னா. இதன்பின் ராயுடு சிறப்பாக விளையாடி 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 17.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஐபிஎல் 2019 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது.

You'r reading ராயுடு மாஸ் ரெய்னா க்ளாஸ் - சீசனை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை அணி 2 கோடி நிதியுதவி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்