சிறு பிள்ளை தனமாக விளையாடியுள்ளார் அஸ்வின்... சர்ச்சைக்குள்ளாகும் பட்லரின் மன்கட் அவுட் ..

controversial comments about aswins played as a small child

ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் ``மன்கட் (ரன் அவுட்)” முறையில் ஜோஸ் பட்லரை அவுட் செய்தார். இது தற்போது ரசிகர்களிடையே கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

12-வது ஐபிஎல் சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணி , ராஜஸ்தான் அணி  இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . பஞ்சாப் அணியின் பந்துவீச்சைப் பறக்கவிட்டார் ஜோஸ் பட்லர். இந்நிலையில் ஜோஸ் பட்லர், அஸ்வினால் `மன்கட்(ரன் அவுட்)' செய்யப்பட்ட விதம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது .

இது குறித்து ஐசிசி விதி அறிக்கையில் "பௌலர் தனது பந்து வீசும் ஆக்சனைச் செய்து பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்தால், பௌலர் அவரை அவுட் செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது . ஆனால் அஸ்வின் செயல் குறித்து சமூக வலைதளத்தில் இருவேறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. சிலர் அஸ்வின் செய்தது தவறு இல்லை என்றும், சிலர் 'சிறு பிள்ளை தனமாக' விளையாடுவதுபோல் அஸ்வின் விளையாடியுள்ளார் என்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

ஜோஸ் பட்லரை அஸ்வின் ரன் அவுட் செய்யாமல் இருந்தால் நிச்சயம் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You'r reading சிறு பிள்ளை தனமாக விளையாடியுள்ளார் அஸ்வின்... சர்ச்சைக்குள்ளாகும் பட்லரின் மன்கட் அவுட் .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குக்கர் சின்னம் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 'அனல் பறந்த' காரசார வாதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்