இது சும்மா டிரெய்லர் தான்மா... பாடகராக மாறிய ஹர்பஜன் சிங்

harbhajan singh sings song for chennai super kings fans

தமிழ் ரசிகர்களுக்காக பாடகராக மாறியுள்ளார் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்.

கடந்தாண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு சென்னை கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் முதல் பிரபல நடிகர்கள் பலர் பேசிய பிரபல பஞ்ச் வசனங்களுடன் அவர் பதிவிடும் ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுவது வழக்கம். தமிழக இளைஞர் ஒருவர் மூலம் இந்தப் பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இதற்கெல்லாம் ஒருபடி மேலாக சென்று தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். அணிக்கான விளம்பர பாட்டு ஒன்றை அவர் பாடியுள்ளார்.

இதன் சாம்பிள் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம், அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம். என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு. இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே. நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல கேளு கேளு இது கானா பாட்டு" எனக் கூறி தனது பாடலின் சாம்பிள் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நாளை மறுநாள் தனது மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இது சும்மா டிரெய்லர் தான்மா... பாடகராக மாறிய ஹர்பஜன் சிங் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இப்படியொரு அற்புதமான இடத்தில் திருமணம் செய்து கொள்ள கொடுப்பனை வேண்டும்… எமி ஜாக்சனின் செம செலக்‌ஷன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்