வார்னே விடுத்த சவால்... வேஷ்டி, சட்டை என ஸ்டைலாக சென்று நிறைவேற்றிய ஹைடன்!

matthew hayden win challenge against shane warne

வார்னே உடன் செய்துகொண்ட சவாலை வேஷ்டி, சட்டை என ஸ்டைலாக சென்று நிறைவேற்றிய ஹைடன்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன். சென்னைக்கும் இவருக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளது. கிட்டத்தட்ட இரண்டாம் தாய் வீடு போல் சென்னை உள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, சென்னைக்காக தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். பின்னர் அந்த போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். அதேபோல் டிஎன்பிஎல் போட்டிகளின் தூதுவராகவும் இருந்து வருகிறார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அவர் அதிக நாட்கள் தங்குவது சென்னையில் தான். தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்வதற்காக இந்தியா வந்துள்ளார் அவர்.

இதற்கிடையே, சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரபலமான எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடமான தி.நகருக்கு மாறுவேஷத்தில் சென்ற ஹைடன் அங்கு ஷாப்பிங் செய்துள்ளார். மாறுவேஷத்தில் அவர் சென்றதற்கான காரணம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. சில நாட்களுக்கு ஆஸ்திரேலிய சூழல் ஜாம்பவான் வார்னே, ரூ.1000 குறைவாக எந்தப் பொருளும் வாங்க முடியாது என சவால் விடுதத்தற்காக அவர் இப்படி வேஷம் போட்டு வந்துள்ளார். தாடி, மீசையுடன் மாறுவேஷத்தில் தி.நகர் வந்த புகைப்படத்தை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வார்னே உடனான சவால் குறித்து பேசியுள்ள அவர், ``1000 ரூபாய்க்கு குறைவாக பொருட்களை வாங்க முடியாது என வார்னே சவால் விட்டார். அதனாலேயே தி.நகருக்கு வந்து லுங்கி, சட்டை, வாட்ச் உள்ளிட்ட பொருட்களை வாங்கினேன். எனக்கு ஒரு உள்ளூர் பையன் ஒருவன் உதவி புரிந்தான். அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். இனி வார்னேவை வெற்றிபெற்றுவிட்டேன் என பெருமையாக சொல்வேன் " என அவர் கூறியுள்ளார். ஹைடன் மாறுவேஷத்தில் உலா வந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

You'r reading வார்னே விடுத்த சவால்... வேஷ்டி, சட்டை என ஸ்டைலாக சென்று நிறைவேற்றிய ஹைடன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரோட்டு கடை பட்டாணி சுண்டல் மசாலா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்