டேல் ஸ்டெயின் ரிட்டனர்ஸ் - வெற்றி பெறுமா பெங்களூரு அணி?

RCB rope in Dale Steyn as replacement for Coulter-Nile

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்த அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்ததில்லை. நடப்பு தொடரிலாவது அந்த சோகத்தை முறியடித்து கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது மங்கதொடங்கிவிட்டது. இதுவரை அந்த 6 போட்டிகளில் விளையாடிவிட்டது. இந்த ஆறிலும் தோல்வி தான். இதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோல்விகளுக்கு விராட் கோலியின் கேப்டன் ஷிப் காரணம் என விமர்சிக்கப்பட்டு வருவதையும் தாண்டி, வீரர்களில் பார்ம் இல்லாதது, சொதப்பல் பீல்டிங் ஆகியவைகளும் காரணமாக உள்ளன.

இதற்கிடையே தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் பெங்களூரு அணிக்கு தெம்பூட்டும் விதமாக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடிய அவர் பெங்களூரு அணிக்காக விளையாண்ட ஓரிரு போட்டிகளிலும் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் தான் ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே தனது 7வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

You'r reading டேல் ஸ்டெயின் ரிட்டனர்ஸ் - வெற்றி பெறுமா பெங்களூரு அணி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - மாட்டிக்கொண்ட தனியார் கட்டுமான நிறுவனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்