தவான் தாண்டவம் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

Dhawan powerplay Delhi Capitals won the match

கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்தன.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சுப்மன் கில் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் விளாசி அதிகபட்சமாக 65 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் விளாசி 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர வகை செய்தார்.

டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களான கிறிஸ் மோரி, ரபடா, கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 1 விக்கெட்டை எடுத்தார்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, 18.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 63 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் விளாசி 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பெறச் செய்தார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களிலும் பிரித்வி ஷா 14 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் ஷிகர் தவானுடன் பார்ட்னர்ஷிப் போட்ட ரிஷப் பன்ட் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி நேற்றைய வெற்றியுடன் சேர்த்து இதுவரை 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

You'r reading தவான் தாண்டவம் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தலன்று கருப்புக் கொடி! ஸ்ரீரங்கம் மக்கள் கொதிப்பு?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்