2 பேர் மிஸ்சிங்...என்ட்ரி கொடுத்த வார்னர், ஸ்மித்! -உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

world cup cricket Australia team announced

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அடுத்த மாதம்(மே) இறுதியில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட முக்கிய அணிகள் கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வருகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), வார்னர், ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப், நாதன் லயன், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் சம்பா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் மற்றும் பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் பட்டியலில் இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் தேர்வுக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.

You'r reading 2 பேர் மிஸ்சிங்...என்ட்ரி கொடுத்த வார்னர், ஸ்மித்! -உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது ; ஊரெங்கும் 'ஓட்டுக்கு துட்டு' எவ்வளவு என்பதே பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்