இனி வாய்ப்பில்ல ராஜா.. 7வது தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி!

Mumbai Indians beat Royal Challengers Bangalore

31வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7வது முறையாக இந்த ஐபிஎல் சீசனில் தோல்வியை தழுவியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.

டாஸ் வென்றிருந்தால், பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என நினைத்த கேப்டன் கோலிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமே கைக்கொடுக்கவில்லை. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, உஷாராக பவுலிங்கை தேர்வு செய்தார். அதனால், இலக்கை அறிந்து விளையாடி அந்த அணி வெற்றியை பதிவு செய்தது.

முதலில் விளையாடிய பெங்களூர் அணியில் கேப்டன் கோலி வெறும் 8 ரன்களுக்கே அவுட்டானது அந்த அணியின் தோல்விக்கு மற்றுமொரு பெரிய காரணமாக அமைந்துவிட்டது.

கோலி ஆடவில்லை என்றாலும், அதற்கடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் மொயின் அலி ஜோடி சிறப்பாகவே ஆடினர்.

51 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரிகள் விளாசிய டிவில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார். 32 பந்துகளில் 5 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசிய மொயின் அலி 50 ரன்கள் அடித்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன் பின் களமிறங்கிய நான்கு வீரர்கள் ரன் எதுவும் எடுக்காதது இறுதி நேரத்தில் அந்த அணி ஸ்கோரை உயர்த்த முடியாமல் போனது.

20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை பெங்களூர் அணி எடுத்திருந்தது.

மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, ஆரம்பம் முதலே நிதானாமாக ஆடி 19வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மும்பை அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டிகாக் 40 ரன்கள் எடுத்தார். கடைசியாக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. பெங்களூர் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்ததால் அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பில்லாமல் போனது.

You'r reading இனி வாய்ப்பில்ல ராஜா.. 7வது தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தைகளுக்கு பிடித்த ஹாட் சாக்லேட் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்