ஒரு கை தட்டுனா ஓசை வராதுhellip தினேஷ் கார்த்திக்கின் அதிரடி வீண் ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி!

Dinesh Karthiks career-best 97 not enough prevent KKRs sixth consecutive loss

கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் விளாசினார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அனைவரும் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற்றனர்.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று இரவு நடைபெற்ற 43வது ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

கிறிஸ் லின் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, சுப்மன் கில் 14 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ராணா 21 ரன்களுக்கும் சுனில் நரைன் 11 ரன்களுக்கும் அதிரடி மன்னன் ரஸல் 14 ரன்களுக்கும் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

ஆனால், மறுமுனையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து கொண்டிருந்த கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 9 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் விளாசி 97 ரன்கள் குவித்தார்.

இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் வருண் ஆரோன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் அஜின்கே ரகானே 34 ரன்களும், சஞ்சு சாம்சன் 22 ரன்களும்,17வயது இளம் வீரர் ரியன் பராக் அதிகபட்சமாக 47 ரன்களும் என நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றனர்.

நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் கொல்கத்தா அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பெங்களூரு அணி தலா 4 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடனும் கடைசி இடங்களில் உள்ளனர்.

இந்த 3 அணிகளில் பெங்களூரு அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறுமா? என்ற கேள்விக் குறியும் எழுந்துள்ளது.

இன்றிரவு சென்னையில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் ஆடினது போதும்.. உடனடியாக நாடு திரும்புங்க.. வெளிநாட்டு வீரர்களுக்கு வந்த அதிரடி உத்தரவு!

You'r reading ஒரு கை தட்டுனா ஓசை வராதுhellip தினேஷ் கார்த்திக்கின் அதிரடி வீண் ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்