ஐதராபாத்தை அதகளம் பண்ணிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா?

Rajasthan Royals won a Royal victory against Sunrisers Hyderabad

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் ஐதராபாத் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதிரடி வீரர் பேர்ஸ்டோ இல்லாததால், டேவிட் வார்னருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. கம் பேக் ஆன கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு மேட்ச் செட்டாகவில்லை.

டேவிட் வார்னர் 37 ரன்களுக்கும் கேன் வில்லியம்சன் 13 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர்.

மணிஷ் பாண்டே மட்டுமே அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 9 பவுண்டரிகள் விளாசி 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொதப்பலாக ஆடி ஒற்றை இலக்க எண்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் அணியின் அனைத்து பவுலர்களும் சிறப்பாக பந்துவீசினர். வருண் ஆரோன், ஒஷானே தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனாத்கட் என 4 பவுலர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரகானே மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சிறப்பான துவக்கத்தை தந்தது. ரகானே 39 ரன்களுக்கும் லிவிங்ஸ்டன் 44 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

22 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அவுட்டாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் 48 ரன்களை அடித்து சஞ்சு சாம்சன் அணியை வெற்றி பெற செய்தார்.

19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே ராஜஸ்தான் அணி இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. அடுத்தடுத்த போட்டிகளில் இந்த அணிகள் தோல்வியை தழுவினாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணியாக மாறும் வாய்ப்பு உள்ளது.

முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 4வது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தற்போது 4வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி செல்லுமா அல்லது பஞ்சாப் அல்லது ராஜஸ்தான் செல்லுமா என்பது அடுத்த அடுத்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கும்.

இந்திய அணிக்காக வெற்றி தேடி தர வேண்டும்... வேகப்பந்து வீச்சாளர் விருப்பம்...

You'r reading ஐதராபாத்தை அதகளம் பண்ணிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடன இயக்குநருடன் காதலில் விழுந்த சிம்பு பட நாயகி! வாவ் காதல் கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்