ஒலிம்பிக் மேடையை அலங்கரிக்க, மத்திய அரசின் டாப்ஸ் திட்டம்!

மத்திய அரசு வரும் 2024 மற்றும் 2028 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பத்து இடங்களை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து வீரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்கவும், அவர்களை திறன்மிகு வீரர்களாக உருமாற்றம் செய்யவும் "டாப்ஸ்" எனும் திட்டம் நடைமுறை படுத்தியுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய திறன்மிகு மையம் இணைந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு கடந்த 1 அக்டோபர் 2020 அன்று முதல் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சிக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின், மிஷன் ஒலிம்பிக் செல் அமைப்பானது 12 விதமான விளையாட்டுகளுக்கு, கொரோனா முழு அடைப்புக்கு முன் தேர்வு செய்யப்பட்ட 85 வீரர்களை சேர்த்து, 258 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இந்த வீரர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக மாதம் 25000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 துறைகளாவது துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு 70 வீரர்கள், தடகளம் 16, வில்வித்தை 34, பேட்மிண்டன் 27, சைக்கிள் பந்தயம் 4, டேபிள் டென்னிஸ் 7, நீச்சல் 14, ஜூடோ 11, குத்துச்சண்டை 36, பளுதூக்குதல் 16, படுகு சவாரி 5 மற்றும் மல்யுத்தம் 18. இந்த வீரர்களின் பெயர் படடியலானது இந்திய விளையாட்டு ஆணையதத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Athletes-in-TOPS.pdf

You'r reading ஒலிம்பிக் மேடையை அலங்கரிக்க, மத்திய அரசின் டாப்ஸ் திட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாண்டிச்சேரியை பதற வைக்கும் லேடி தாதா பாஜகவில் இணைந்தது எப்படி?.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்