விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது: பிசிசிஐ பரிந்துரை

விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பெயரை மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரைத்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விளையாட்டு துறையில் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதுக்கு சுனில் கவாஸ்கர் பெயரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது: பிசிசிஐ பரிந்துரை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிறந்தநாளன்று அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கும் விஜய்..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்