கோலி இஸ் ஆவ்ஸம்- புகழ்ந்துதள்ளும் ப்ரீத்தி ஜிந்தா!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ப்ரீத்தி ஜிந்தா, தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர், `விராட் கோலி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்؟' என்று கேட்டார். அதற்கு ப்ரீத்தி, `அவர் ஆவ்ஸம்' என்று ஒற்றை வார்த்தையில் கோலிக்கு புகழாரம் சூட்டினார்.

பிரீத்தியின் இந்த புகழ்மாலை தற்போது ட்விட்டர் வைரல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதே போல் சில நாள்களுக்கு முன்னர் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், ப்ரீத்தி பஞ்சாப் அணி பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், `மும்பை இந்தியன்ஸ் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று கூறினார். இது அதிவேக வைரலாக, தற்போது கோலி குறித்து ப்ரீத்தி கூறியுள்ள கருத்துகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

 

You'r reading கோலி இஸ் ஆவ்ஸம்- புகழ்ந்துதள்ளும் ப்ரீத்தி ஜிந்தா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோனியின் மகள் ஜிவாவின் அசத்தல் வீடியோ! புனே ரசிகர்களுக்கென தோனி பதில்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்