மும்பையில் இன்று பரப்பரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே vs எஸ்ஆர்எச்..!

ஐபிஎல் போட்டி தொடரின் இறுதிக்கட்ட போட்டி இன்று சிஎஸ்கே vs ஹைதரபாத் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸ் சாதனையை இந்த போட்டியின் மூலம் சிஎஸ்கே சமன் செய்யுமா ? என்ற முனைப்புடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 தொடர், கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் ஆரம்பமானது. இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி இம்முறை கலந்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை ஆடி பைனஸ்சுக்கு முன்னேறி உள்ளது. சிஎஸ்கே 7வது முறையாக பைனஸ்சுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த ஐபிஎல் தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து சிஎஸ்கே இரண்டு முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியின் விளையாடி வெற்றிப்பெற்று மும்பை இந்தியன்சை சிஎஸ்கே சமம் செய்யுமா என்று காத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக, புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதரபாத் அணியுடன் மோதி சிஎஸ்கே வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியை பொருத்தளவில், அம்பதி ராயுடு, கேப்டன் தோனி, வாட்சன், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டக்காரர்களாக உள்ளனர். இதேபோல், பந்துவீச்சல் லுங்கி நிகிடி, தீபக் ஷகார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். இதனால், சென்னை அணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மும்பையில் இன்று பரப்பரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே vs எஸ்ஆர்எச்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முடிவுக்கு வந்தது 144 தடை உத்தரவு.. தூத்துக்குடியின் தற்போதைய நிலை என்ன ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்