புதிய சாதனை படைத்த மிதாலி ராஜ்!

சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

பெண்கள் ஆசியக் கோப்பைக்காக இன்று இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இந்த டி20 போட்டியில் தான் இந்த சர்வதேச சாதனையை நிகழ்த்தி உள்ளார் மிதாலி ராஜ்.

இந்தச் சாதனையை மிதாலி வெறும் 75 போட்டிகளில் பெற்றுள்ளார். மிதாலியைக் கவுரவப்ப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மிதாலிக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி இலங்கையை இத்தொடருக்கான 12-வது போட்டியில் சந்தித்தது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. துவக்க வீராங்கணை வேதா கிருஷ்ணமூர்த்தி அதிகப்பட்சமாக அவுட் ஆகாமல் 29 ரன்களும், பந்துவீச்சாளர்களில் ஏக்தா 20-க்கு 2 விக்கெட் வீதமும் எடுத்து இருந்தனர்.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட் செய்ய முடிவு எடுத்தது. இலங்கையின் ஹாசினி பெரேரா, 4 பவுண்டரிகள் உடன் 46 ரன்களுக்கு அவுட் ஆகாமல் இருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading புதிய சாதனை படைத்த மிதாலி ராஜ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏடிஎம் கொள்ளை வழக்கு... அரசியல் கட்சியினருக்கு தொடர்பா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்