இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று உள்ளது.

இந்தியா, இலங்கைக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் ஏற்கனவே முன்னிலை வகித்தது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து இன்று 2வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கையின் பந்து வீச்சாளர்களை தலைச்சுற்ற வைத்தது. பந்துகள் நாளா புறமும் சிதறின. ரோஹித் ஷர்மா தனது 3வது இரட்டை சதத்தை (208) பதிவு செய்தார் 12 சீக்ஸ்ர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் இதில் அடங்கும். ரோஹித்தின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 392 ரன்களை குவித்தது.

வெற்றி பெற 393 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கை இலங்கைக்கு இந்திய அணி நிர்ணயித்தது. இந்திய அணி பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாத இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்துதடுத்து வெளியேற மேத்தியூஸ் மட்டும் சற்று நிதானம் காத்து சதம் விளாசினார் (111). நிறைவில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 50 ஓவர்களில் 251 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்திய அணி141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-1 என்ற புள்ளியை சமன் செய்துள்ளது.

You'r reading இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 6 வயதில் அம்பானியான பிரபல யூடியூப் சேனல் சிறுவன் ரியான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்