FIFA World Cup - கால்பந்து கணிப்புகள்... தி சப்எடிட்டர் ஸ்பெஷல் (வீடியோ)

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இன்று முதல் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.

உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ஸ்வீடன், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் பல தடைகளை தாண்டி, காலிறுதி போட்டியில் களம்காண உள்ளன.

அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு காலிறுதி சுற்றின் முதல் போட்டி உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. தொடர்ந்து, இன்று இரவு 11.30 மணிக்கு பிரேசில், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

நாளை இரவு 7.30 மணிக்கு ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியும், தொடர்ந்து 11.30 மணிக்கு ரஷ்யா மற்றும் குரோஷியா ஆகிய அணிகளுக்கிடையே போட்டியும் நடைபெற உள்ளன. இந்த காலிறுதி சுற்றில் வெற்றிப்பெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை காலிறுதி போட்டிகளை காண உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகக்கோப்பை 2018 காலிறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து கூடுதல் தகவல்களைத் தருகிறார் ரமேஷ் வெங்கிடசாமி, வீடியோ...

 

You'r reading FIFA World Cup - கால்பந்து கணிப்புகள்... தி சப்எடிட்டர் ஸ்பெஷல் (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எட்டு வழிச்சாலை பணிகள்... தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்